தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்வது எவ்வாறு....!!

தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே ஸ்கால்பில் குளிர்ச்சியளித்து ஆறுதலைத் தருகிறது. தேங்காய் எண்ணெயின் மூலக்கூறு எடை குறைவாக இருப்பதால் இது மற்ற எண்ணெய்களை விட முடியின் உள்ளே எளிதில் ஊடுறுவும் தன்மை கொண்டது.

* அரை கப் தேங்காய் எண்ணெயை எடுத்து அதை மெல்லிய தணலில் சூடாக்குங்கள். ஒரு நிமிடம் கழித்து தணலை அணைக்கவும். இந்த எண்ணை குளிரும் வரை காத்திருந்து வெதுவெதுப்பான பதத்தில் ஸ்கால்பில் தேய்க்கும்போது அது ஊட்டமளித்து, முடியை வலுவூட்டி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

* உங்கள் தலையில் ஈஸ்ட் போன்ற நுண்ணுயிர் தொற்றுக்கள் வளர்ச்சி மற்றும் பொடுகு இருந்தால் தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் எலுமிச்சையை சேர்த்து பயன்படுத்தவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை ஈஸ்டை கொன்று பொடுகைப் போக்கி தலைமுடியை பளபளப்பாக்கும்.

* ஒரு பஞ்சு உருண்டையை எண்ணெயில் முக்கி உங்கள் ஸ்கால்பில் நன்கு தாராளமாக தடவவும். ஸ்கால்ப் நன்கு எண்ணெயில் நனைந்தவுடன் எண்ணெயை உள்ளங்கையில் எடுத்து உங்கள் கூந்தலின் நுனி வரை தடவவும்.

* தலையை சுழற்சியாக உங்களின் விரல் நுனிகளின் மென்மையான முனைகளைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து எண்ணெய் ஸ்கால்பின் உள்செல்லுமாறு தேய்க்கவும். உங்கள் கூந்தலை இறுக்கமில்லாமல் கட்டி ஒரு ஷவர் கேப் (தொப்பி) கொண்டு மூடவும். இந்த மாஸ்கை ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.

* பின்னர் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தவும். தலையில் உள்ள அதிக ஈரத்தை மென்மையாக தண்ணீரை உறிஞ்ச கூடிய டவலை கொண்டு துடைத்து, முடியை கட்டவும். பின்னர் தானாக முடி காயுமாறு விடவும். நல்ல பலன்களுக்கு இந்த தேங்காய் எண்ணெய் மாஸ்கை வாரம் ஒரு முறை செய்வது பலனை தரும்.
Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :