Latest Posts

சசிகலாவுக்கும் எனக்கும் உள்ள பிரச்சனை: நடிகர் ஆனந்தராஜ் ஓப்பன் டாக்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பெற சசிகலா அவரசம் காட்ட வேண்டாம் என அந்த கட்சியின் பேச்சாளர் நடிகர் ஆனந்தராஜ் சமீபத்தில் கூறியிருந்தார்.


அவசரம் காட்ட வேண்டாம், பொருமையாக செயல்படுங்கள் என ஆனந்தராஜ் கூறிய இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து தமிழ் நாளிதல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் ஆனந்தராஜ் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

அதில் ஏழு நாட்கள் துக்கம் முடியும் முன்னர் சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என அவசரம் காட்டுவது கட்சி தொண்டனாக எனக்கு வருத்தம் தான். துக்கம் கூட முடியாத நேரத்தில், அவசரம் காட்ட வேண்டியதில்லை. இது, மக்களின் கருத்தாக உள்ளது. ஏழு நாள் துக்கம் முடிவதற்குள், அவசரம் காட்ட வேண்டியதில்லை நிதானம் தேவை என்றார்.

மேலும் சசிகலாவுக்கும் உங்களுக்கும் தனிப்பட்ட பிரச்சனை ஏதாவது உள்ளதா என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஆனந்தராஜ், நிச்சயமாக இல்லை, சசிகலாவை சந்திக்கும்க் வய்ப்பு அதிகமாக ஏற்பட்டதில்லை. ஆனால் பொதுச்செயலாளர் பதவிக்கு யார் வரவேண்டும் என கேட்டதற்கு, நான் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. யார் வந்தாலும் தொண்டனாக பணியாற்றுவேன் என்றார்.


Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :