Latest Posts

மூன்றே நாட்களில் முகம், கை, கால்களில் உள்ள கருமை போக வேண்டுமா? இதோ ஓர் எளிய வழி!

முகம், கை, கால், கழுத்து போன்ற பகுதிகள் கருமையாக உள்ளதா? என்ன செய்தாலும் இந்த கருமைகள் போகவேமாட்டீங்குதா? இதற்காக எத்தனையோ வழிகளை முயற்சித்திருக்கிறீர்களா? இருப்பினும் எவ்வித பலனும் கிடைக்கவில்லையா? கவலையை விடுங்கள்.
இக்கட்டுரையில் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் ஓர் எளிய மாஸ்க் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த மாஸ்க்கின் மூலம் மூன்றே நாட்களில் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கலாம். சரி, இப்போது அந்த மாஸ்க்கை எப்படி செய்வதென்று காண்போம்.


தேவையான பொருட்கள்:

* அதிமதுர பொடி
* தக்காளி
* பால்
* ரோஸ் வாட்டர்
* தேன்
அதிமதுரம் 

இந்த மாஸ்க்கில் உள்ள அதிமதுரம் சருமத்தில் உள்ள கருமையான தழும்புகள் மற்றும் புள்ளிகளைப் போக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்டும்.
தக்காளி :

தக்காளியில் உள்ள அமிலம், சருமத்தில் உள்ள நீங்கா கறைகளை எளிதில் போக்க உதவும்.
பால் மற்றும் தேன் :

பால் மற்றும் தேன் சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரித்து, சருமத்திற்கு பொலிவைத் தரும்.
ரோஸ் வாட்டர் :

ரோஸ் வாட்டர் வறட்சியான சருமத்தை ஈரப்பதமூட்டும் மற்றும் எண்ணெய் பசை சருமத்திற்கு நிறமூட்டும், பாதிக்கப்பட்ட சரும செல்களை சரிசெய்யும் மற்றும் சென்சிடிவ் சருமத்தை மென்மையூட்டும்.
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள பகுதியில் தடவி 15-20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :