Latest Posts

பெண்களின் முக ரோமங்களை போக்கும் கஸ்தூரி மஞ்சள்!

பெண்கள் சிலருக்கு முகத்தில் தேவையற்ற இடங்களில் ரோமங்கள் முளைத்திருப்பது அவர்களின் அழகையும், தன்னம்பிக்கையையும் பாதிக்கும். ரோமத்தை போக்க கடைகளில் விற்கும் லோசன்களை வாங்கி தேய்த்தும் நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை. முகத்தில் உள்ள ரோமத்தைப் போக்க ஹேர் ரிமூவர்கள் உபயோகிப்பது நல்லதல்ல என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். இதனால் முடியின் தன்மை மாறி கடினமாக ஆகிவிடும். எனவே இயற்கையான முறையில் முகத்தில் உள்ள ரோமங்களை அகற்ற அழகியல் நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அவற்றை பின்பற்றி பாருங்களேன்.

கஸ்தூரி மஞ்சள்:
கஸ்தூரி மஞ்சளுக்கு முடி வளர்ச்சியை குறைக்கும் தன்மை உண்டு. எனவே நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் கஸ்தூரி மஞ்சளை வாங்கி அதனுடன் பாசிப்பயறு சேர்ந்து இரண்டையும் வெளியில் காயவைத்து மெஷினில் அரைத்து வைத்துக்கொள்ளவும். தினசரி குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் இந்த பவுடரை போட்டு கழுவவும். உடனடியாக பலன் தராது. ஆனால் நாளடைவில் முடியை உதிரச்செய்து ரோமங்கள் வளர்வதை தடுக்கிறது. முகமும் அழகாவதோடு சருமமும் பாதுகாக்கப்படும்.
  வேப்பிலை, மஞ்சள்:
முகத்தில் காணப்படும் ரோமங்கள் நீங்க குப்பைமேனி இலை, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து தேவையற்ற ரோமங்கள் உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் தேவையற்ற ரோமங்கள் அகன்று விடும். அதே போல், வேப்பங்கொழுந்தை அரைத்து பூசினாலும் ரோமங்கள் உதிர்ந்து விடும்.

பாசிப் பயறு, மஞ்சள் :
பச்சை பயிறை நன்றாக அரைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், சிலருக்கு முகத்தில் காணப்படும் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்து விடும். தினசரி மஞ்சள் தேய்த்து குளித்து வருவதாலும், முகத்தில் ரோமங்கள் வளராது. 
சர்க்கரை கரைசல்:
2 கப் சர்க்கரையில், கால் கப் எலுமிச்சை சாறு ஊற்றி அரை கப் தண்ணீர் ஊற்றி கலக்கவும். இந்த கலவையை அகலமான பாத்திரத்தில் போட்டு மிதமாக சூடுபடுத்தவும். லேசாக நுரைகள் வந்த உடன் இறக்கிவைத்து லேசாக குளிர வைக்கவும். கைகளை நன்றாக கழுவிய பின்னர் இந்த கலவையை எடுத்து முகத்தில் ரோமம் உள்ள பகுதிகளில் நன்றாக திக்காக அப்ளை செய்யவும். (தோல் பொசுங்கிவிடும் என்ற அச்சம் வேண்டாம்) பின்னர் உலர்ந்த பின்னர் காட்டன் துணி கொண்டு அவற்றை துடைத்து எடுக்கவும். தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்து விடும். முகமும் பொலிவடையும்.

Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :