சொட்டையில் முடி வளர்வதற்கும், நரை முடிக்கும் கருஞ்சீரக எண்ணெயை எப்படி உபயோகிக்கலாம்?

மிக பழமையான ஆயுர்வேத குறிப்புகளில் , கூந்தல் வளர்ச்சியில் கருஞ்சீரகம் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். கருஞ் சீரகமத்தில் நைஜெல்லோன் மற்றும் தைமோ க்யுனோன் போன்ற முக்கிய காரணிகள் ள்ளன. இவை முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொடுகு, வறட்சி, கிருமித் தொற்று , பலவீனமான முடிக்கற்றைகள் போன்ற பலப்பிரச்சனைகளையும் சரி செய்யும் குணங்கள் கருஞ்சீரகத்தில் உள்ளது. சொட்டையிலும் முடி வளர்ச் செய்யும். நரை முடியை தடுக்கும். இவ்வளவு நன்மைகள் கொண்ட கருஞ்சீரகத்தை எப்படி பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.



கருஞ்சீரக எண்ணெய் :
கருஞ்சீரக எண்ணெயை நேரடியாக உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும். அப்படி இல்லாத சமயத்தில் கருஞ்சீரகத்தை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்துக் கொள்ளுங்கள். குறைந்த தீயில் எண்ணெயின் நிறம் முழுவதும் மாறும் வரை சுமார் 20-30 நிமிடம் வைத்து இறக்கவும். ஆறியபின் வடிகட்டி அந்த எண்ணெயை கருஞ்சீரக என்ணெயாக பயன்படுத்தலாம்.

உபயோகிக்கும் முறை-1
கருஞ்சீரக எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சம அளவு எடுத்து கலந்து லேசாக சூடுபடுத்தி ஸ்கால்ப்பில் அழுத்தி மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். இவ்வாறு வாரம் 3 நாட்கள் செய்தால் முடி உதிர்தல் குறைந்து அடர்த்தி பெருகும்.

உபயோகிக்கும் முறை-2 :
இரவில் புதிதான எலுமிச்சை சாறை எடுத்து அதனுடன் கருஞ்சீரக எண்ணெய் கலந்து தலையில் தேயுங்கள். மசாஜ் செய்து பி இரவு முழுதும் அப்படியே வைத்து மறு நாள் குளிகவும். சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் பகலில் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளிக்கவும். வாரம் இருமுறை செய்தால் பொடுகு மாயமாய் மறைந்துவிடும்.

உபயோகிக்கும் முறை-3 :
கருஞ்சீரக எண்ணெயுடன் சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து தலையில் தேய்த்து 10 நிமிடம் மசாஜ் செய்யவும். பிறகு ஒரு டர்க்கி துண்டை சூடான நீரில் நனைத்து பிழிந்து தலைமுடி முழுவதும் படும்படி கட்டவும். அரை மனி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

கருஞ்சீரக எண்ணெயை உபயோகிப்பதால் உண்டாகும் நன்மைகள் : கருஞ்சீரகத்திம் 100 வகையான சத்துக்கள் இருக்கிறது. இது கூந்தல் கற்றைகளுக்கு போஷாக்கு அளிகிறது. அடர்த்தியாக வளர் தூண்டுகிறது.

நரைமுடியை தடுக்கும் : இது வளர்ந்த நரைமுடியையும் கருமையாக மாற்றும். கூந்தல் செல்களில் மெலனின் சுரப்பை தூண்டுகிறது. ஸ்கால்ப்பில் உண்டாகும் தொற்றுக்களையும் சரி செய்கிறது.




Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :