தூத்துக்குடியில் நடிகர் சமுத்திரகனி ரசிகர்களுடன் கலந்துரையாடினார்

தூத்துக்குடியில் நடிகர் சமுத்திரகனி நேற்று ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

நடிகர் சமுத்திரகனி 

தூத்துக்குடியில் ‘தொண்டன்‘ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள பாலகிருஷ்ணா தியேட்டருக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு திரைப்பட நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி, நடிகர் விக்ராந்த் ஆகியோர் வந்தனர். அவர்களை தியேட்டர் உரிமையாளர்கள் பாலகிருஷ்ணன், ராமையா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் சமுத்திரகனி ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அதன்பிறகு தியேட்டர் வளாகத்தில் மரக்கன்று நட்டார்.

தொடர்ந்து சமுத்திரகனி நிருபர்களிடம் கூறியதாவது;–

அரசியல் 

தொண்டன் திரைப்படத்திற்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு எனது ரசிகர்களுக்கும், படம் திரையிடப்பட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். படத்தின் கருத்து குறித்து தெரிந்து கொள்வதற்காக ரசிகர்களை சந்தித்து வருகிறேன். நான் தூத்துக்குடிக்கு முதல்முறையாக வந்துள்ளேன். இது மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. இருந்தாலும் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதை முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான்.

தற்போது இளம் இயக்குனர்கள் தெளிவாக உள்ளனர். அவர்கள் தங்களது பாதையில் சரியாக செல்கின்றனர். அவர்களுடன் போட்டி போட என்னை போன்ற இயக்குனர்கள் அதிகம் உழைக்க வேண்டியது உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :