தூத்துக்குடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம் :

தூத்துக்குடி புனித அந்தோணியார் ஆலய 55–வது ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 5–15 மணிக்கு முதல் திருப்பலி நடந்தது. காலை 6 மணிக்கு ஏரல் ஒத்தாசை மாதா ஆலய பங்குதந்தை சவரிமுத்து தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு திருப்பலிகள் நடந்தன.

நிகழ்ச்சியில் ஆலய பங்குதந்தை சுசிலன் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டு திருப்பலி :

தொடர்ந்து விழா நாட்களில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடக்கின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 12–ந்தேதி மாலை 6–30 மணிக்கு மறைமாவட்ட முதல்வர் கிருபாகரன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனையும், 13–ந்தேதி காலை 6–30 மணிக்கு திருவிழா கூட்டு திருப்பலியும், மதியம் 12 மணிக்கு நவநாள் திருவிழா திருப்பலியும் நடக்கிறது.


Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :