உடல் வனப்பைக் கூட்டும் வெந்தயம்

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம். செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் விதைகளின் கருவில் காலக்டோமன்னை காணப்படுகிறது.

இளம் விதைகளில் கார்போஹைட்ரேட், சர்க்கரையும் முதிர்ந்த விதைகளில் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் கரோட்டீன் வைட்டமின்கள், ஜெட்ரோஜெனின், ட்ரைகோனெல்லோசைட், ட்ரைகோனெல்லின், ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. வெந்தயத்தின் இலைகளும், விதைகளும் மருத்துவப்பயன் உடையவை வெந்தயக்கீரை வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்புச் சத்து இருப்பதால் மாரடைப்பு, கண்பார்வைக் கோளாறு, வாதம், நாள்பட்ட சொறி, சிரங்கு உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும்.

இக்கீரையை பச்சையாக அரைத்து தீக்காயங்களுக்கு புற்றுப் போட்டு வைப்பதால் காயம் குணமாவதோடு குளிர்ச்சியாகவும் இருக்கும். நாம் உண்ணும் நூறு கிராம் அளவு கிரையில் 86.1 சதவீதம் ஈரச்சத்தும், 4.4சதவீதம் புரதச்சத்தும், 1.1சதவீதம் நார்ச்சத்தும், 1.5சதவீதம் தாதுச்சத்துக்களும், 0.9சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளது.

மருத்துவப் பயன் விதைகள் மியூசிலேஜ் கொண்டவை. நோயை தீர்க்கும். சிறுநீர்க்கழிவை அதிகரிக்கும். அஜீரணத்தைப் போக்கும். மாதவிடாய் போக்கை அதிகரிக்கும். துவர்ப்புள்ளது. தோலை மிருதுவாக்கும். வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாயுக்கோளாறு, சீதபேதி, பசியின்மை, இருமல், நீர்க்கோவை, ஈரல், மண்ணீரல் வீக்கம், வாதநோய், ரிக்கெட்ஸ், ரத்தசோகை, நீரிழிவு நோய் ஆகியவற்றை குணப்படுத்தும்.


Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :