ரஜினி கட்சி தொடங்கினால் 5 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாவ தயார்?
சமீபத்தில் தனது ரசிகர்களை 9 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தும் விதமாக பல கருத்துக்களை கூறினார். இதனையடுத்து இன்னும் சில மாதங்களில் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் அவரை சந்தித்த பின்பு காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறினார்.
நடிகர்-நடிகைகள் பலரும் ரஜினியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ரஜினி கட்சி தொடங்கினால் பல்வேறு கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளும், அதிருப்தி நிர்வாகிகளும் அதில் சேர ஆர்வத்துடன் உள்ளனர்.
ரஜினியின் கட்சிக்கு ஆலோசனைகளை வழங்க பெங்களூரு நிறுவனம் ஒன்று அமர்த்தப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம்தான் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஒழுங்குபடுத்த உள்ளதாம்.
இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் ரஜினிகாந்த்தை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி கட்சி தொடங்கினால் அதில் சேரும் முடிவுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஓ.பி.எஸ். அணி, எடப்பாடி பழனிசாமி அணி நிர்வாகிகள் சிலரும் ரஜினியை சந்திக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதே போல் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் ரஜினியை சந்திக்க தூது அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மும்பையில் இருக்கும் ரஜினி யாரையும் சந்திக்காமல் தவிர்த்து வருகிறார்.

Labels
News
Post A Comment
No comments :