கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணம் மற்றும் தாகத்தை தீர்க்ககூடிய நுங்கு!

கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கால்சியல், பாஸ்பரஸ்,  வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவநிலை கலந்த திண்ம விதையானது மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும். இந்த பருவம் தாண்டி சற்று முற்றி விட்டால் இதன் சுவை குன்றிவிடும்.

கோடைக்கேற்றது நுங்கு. இயற்கையாய் படைக்கப்பட்ட அனைத்தும் நமக்கு அளிக்கப்பட்ட வரம் என்றே சொல்ல வேண்டும். இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் மிக்கது. கோடை காலம் வந்துவிட்டாலே நமக்கு  நினைவுக்கு வருவது நுங்கு தான். 

கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

நுங்குக்கு கொழுப்பை கட்டுபடுத்தி, உடல் எடையை குறைக்கும் தன்மை உண்டு. இதனை சாப்பிடுவதால் சாப்பிட பிடிக்காமல்  இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும்.

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, உடல் உஷ்ணம் மற்றும் தாகத்தை தீர்க்ககூடியது. ரத்த சோகை உள்ளவர்கள் நுங்கை தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும். மார்பக புற்று நோய் வருவதை தடுப்பதோடு, வெயில் காலத்தில்  வரும் அம்மை நோயினை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :