மன்னிப்பு கேட்க ரெடி.. கமல்!
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் பெயரை குறிப்பிட்ட விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகர் திலீப் விவகாரத்தில் மலையாள நடிகை மீதாக பாலியல் துன்புறுத்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், நடிகையின் பெயரை பகிரங்கமாக கூறியதோடு, அவரது பெயரை ஏன் சொல்லக் கூடாது என்றும் வாதாடினார்.
இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம், நடிகர் கமல்ஹாசன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நடிகையின் பெயரைக் கூறியது ஏன் என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டிவிட்டர் பதிவில், நடிகை பலாத்கார வழக்கில் பெயரை குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பெண்கள் கூறுகின்றனர். கடவுளை தவிர சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. குற்றவாளிகளை விட்டுவிட்டு வழக்கறிஞரை தண்டிப்பது போல் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Post A Comment
No comments :